Tuesday, July 24, 2018

கிளிநொச்சியில் வறட்சி 21,959 குடும்பங்கள் பாதிப்பு!

SHARE
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 21 ஆயிரத்து 959 குடும்பங்களை சேர்ந்த 74 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.




அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 15 ஆயிரத்து 368 குடும்பங்களும்,  கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில்  ஆயிரத்து 525 குடும்பங்களும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆயிரத்து 740 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆயிரத்து 326 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நகரில் திணைக்களத்திற்க உரித்தான காணிகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றில் பல்வேறு அரச திணைக்களங்கள் அமைந்துள்ளன.  ஆனால் நாங்கள் இன்று எமது அலுவலகத்தை அமைப்பதற்கு காணி தேடி திரிவதாக வடமாகாண காணி ஆணையாளர் தெரிவித்தார்.
SHARE