Thursday, July 26, 2018

இன்றைய ராசிபலன் - 26.07.2018

SHARE

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திருப்பம் ஏற்படும் நாள்.  




ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.




மிதுனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.




கடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர் வருகை உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.




சிம்மம்: குடும்ப வரு மானத்தை உயர்த்த முற் படுவீர்கள். அநாவ சியச் செலவுகளை கட்டுப் படுத்து வீர்கள். உறவினர்களின் ஆதரவுக்கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.




கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.




துலாம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர் கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். தைரியம் கூடும் நாள். 




விருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.




தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்றுவேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். 




மகரம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 



கும்பம்: திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதி கரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.



மீனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
SHARE