Saturday, July 28, 2018

இன்றைய ராசிபலன் - 28.07.2018

SHARE

மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புதுபொறுப்புகள் தேடிவரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.




ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.



மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.




கடகம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.




சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.




கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன் றும். பிள்கைளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.




துலாம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். நட்பு வட்டம் விரியும். புது வேலை கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.





விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.



தனுசு: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.





மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். போராடி வெல்லும் நாள். 




மீனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு  கிடைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

SHARE