Wednesday, July 25, 2018

3 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளுடன் பெண் கைது!

SHARE

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொண்டுவர முயற்சித்த, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் குவைத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) குறித்த தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.




இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண் என்றும், அவரிடம் இருந்து 5.185 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுங்க பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
SHARE