Tuesday, July 10, 2018

கமல் படம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகாது!

SHARE

நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ தயாரித்த திரைப்படங்கள் அனைத்தும் கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு (ஜூலை 9) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், இசை, நடனம், தயாரிப்பு என திரைத்துறை சார்ந்த அத்தனைத் துறைகளிலும் ஈடுபாடுக் கொண்டு அதை திறம்பட செய்து வருகிறவர். புதிய புதிய யுக்திகளை தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகம் செய்ததில் கமல் ஹாசனுக்கு முக்கியப் பங்குண்டு.

அந்த வகையில் நடிகராக மட்டும் அறிமுகமாகியிருந்த கமல் ஹாசன் 1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மூலம், தனது ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தாயாரிப்பாளராக அறிமுகமானார். 1987ஆம் ஆண்டு கடமை கண்ணியம் கட்டுப்பாடு திரைபடத்தை, நடிகர் சத்யராஜை வைத்து இயக்குநர் சந்தானபாரதி இயக்கி இருந்தார். இந்த படம் தவிர, தனது தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மற்ற அனைத்து திரைப்படங்களிலும் கமல் ஹாசன் நடித்திருந்தார்.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பில், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், மகளிர் மட்டும், குருதிபுனல், ஹே ராம், நள தமயந்தி, விருமாண்டி, உன்னை போல் ஒருவன், விஸ்வரூபம், உத்தம வில்லன், தூங்கா வனம் உள்ளிட்டப் படங்களை தயாரித்துள்ளனர். இதுவரை இந்த நிறுவனத்தின் படங்கள் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருந்தது.   (ஜூலை 9) கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து, விஜய் தொலைக்காட்சிக்கு அனைத்துப் படங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
SHARE