Thursday, July 12, 2018

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு ஊழியர்கள் இருவரை நியமிக்க ஏற்பாடு!

SHARE

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான அலுகோசு பதவிக்கு இரண்டு பேரை நியமிப்பதற்கான விண்ணப்பங் கோரலை சிறைச்சாலைகள் திணைக்களம் கோரவுள்ளது.

போதைப் பொருள்கள் கடத்தலுடன் தொடர்புடைய தூக்குத் தண்டனைக் குற்றவாளிகளின் தூக்கை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ள நிலையில் இந்தப் பணிக்கான நியமனம் இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உப்புல்தனிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“அலுகோசு பதவிக்கு 2015ஆம் ஆண்டு தொடக்கம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இரண்டு அலுகோசு ஊழியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அவர்கள் பயிற்சியின் பின்னர் பதவியிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர்.

தூக்கிலிப்படும் துலா மற்றும் கயிறு உள்ளிட்ட உபகரணங்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் தயாராகவே உள்ளன.

தற்போது 13 சிறைக் கைதிகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்தின் கீழ் தூக்குத் தண்டனையை எதிர்கொள்கின்றனர். அவர்களில் ஒருவர் பெண்” என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உப்புல்தனிய மேலும் தெரிவித்தார்.
SHARE