Sunday, July 8, 2018

ஓவியா-ஆரவ்: நட்பா, காதலா?

SHARE

நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பேங்காக் வீதிகளில் உலா வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாபிக்காக உள்ளன.

ஓவியா தமிழில் அறிமுகமான களவாணி திரைப்படம் வெற்றிபெற அதன் கன்னடம் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே ஹீரோயினாக நடித்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு மற்றும் மூடர் கூடம், மதயானைக் கூட்டம், புலிவால், சில்லுனு ஒரு சந்திப்பு, சண்டமருதம் போன்ற திரைப்படங்களிலும் நடித்த ஓவியா கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு திரைப்படத்தில் கௌரவ வேடத்திலும் தோன்றினார்.




ஓவியா கடந்த ஆண்டு பிக்பாஸ் 15 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார். ஓவியாவின் அணுகுமுறை, எதையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ஆகியவை அவருக்குத் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துகொடுத்துள்ளது. அதே சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றவர் ஆரவ். ஆரவிடம் தனது காதலை வெளிப்படுத்திய ஓவியாவிற்கு ஏமாற்றமாக இருந்தது அவரது பதில். இருந்த போதிலும் இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்வது என முடிவு செய்து அறிவித்தனர். தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஓவியாவும் ஆரவ்வும் தாய்லாந்தின் பேங்காக் நகரில் கைக்கோர்த்தபடி உலாவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.




ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொண்டாரா என சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகிறது. அவர்கள் இருவரும் லிவிங்டுகெதர் பாணியில் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆரவ்-ஓவியா இடையே மீண்டும் காதல் மலந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் இருவரும் தாய்லாந்தின் பேங்காங் தெருக்களில் நடந்து செல்லும் புகைப்படம் அமைந்திருக்கிறது.


SHARE