Tuesday, July 31, 2018

விளையாடிக்கொண்டிருந்த போது கயிறு கழுத்தில் இறுகி மாணவன் உயிரிழப்பு!

SHARE

கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலியான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள மூன்று பெண் சகோதரிகளுக்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.




வழமையாக குறித்த பகுதியில் விளையாடுவதாகவும், அவ்வாறே இன்றும் விளையாடிக்கொண்டிருக்கையில் அங்குள்ள கொய்யா மரம் ஒன்றில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் இறுகி சிறுவன் உயிரிழந்துள்ளார்.என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது சிறுவனை தாயார் மற்றும் சகோதரிகள் மீட்டு அயலவர்களின் உதவியுடன் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
SHARE