Tuesday, July 10, 2018

பிரபு தேவாவுடன் இணைந்த பாகுபலி வில்லன்!

SHARE

நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில் பாகுபலியில் வில்லனாக நடித்த பிரபாகர் இணைந்துள்ளார்.

ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபு தேவா போலீஸாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பாகுபலி படத்தில் வில்லனாக காலகேயர் தலைவன் இன்கோசி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபாகர் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திலும் பிரபாகர் வில்லனாக நடிக்க இருப்பதாகவே கூறப்படுகிறது. ஏற்கனவே அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கி வரும் யங் மங் சங் திரைப்படத்திலும் பிரபு தேவா, பிரபாகர் இணைந்து நடித்துள்ளனர்.




இதில் பிரபு தேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜும், முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அன்பரிவ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். டிக் டிக் டிக் படத்தை தயாரித்த ஜபக் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
SHARE