Sunday, July 8, 2018

கடைக்குட்டி சிங்கம்: கலர் புல்லான கிராமத்து படம்!

SHARE

கார்த்தி, சாயிஷா நடிப்பில் உருவாகிவரும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ட்ரெய்லர் (ஜூலை 6) வெளியாகியுள்ளது.

சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். ரேக்ளா பந்தயம், கிடா வெட்டு, சிலம்பாட்டம், சொந்த பந்தங்கள் பாசம் எனக் கிராமத்து சினிமாவாக உருவாகி வருவதை ஏற்கனவே வெளியான டீசர் மூலம் அறியமுடிந்தது.




சத்யராஜுக்கு விஜி, பானுப்ரியா என இரு மனைவிகள். சொந்த பந்தங்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் இவர்கள் இருவரது பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உள்முரண்கள் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லர் காட்சிகள் உணர்த்துகின்றன. விவசாயத்தைப் புகழ்ந்தும், சாதிக்கு எதிரானதுமான வசனங்கள் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. பச்சை பசேலன விரியும் வயல்வெளியும், கலர் புல்லான திருவிழாவும், ரேக்ளா பந்தயமும் கண்ணுக்கு விருந்தாக அமையும். கார்த்தியின் மாஸ் காட்டும் விதமாக ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெறுகின்றன. சூரி கார்த்தியுடனே பயணித்து காமெடி செய்கிறார்.

குடும்ப சென்டிமென்ட், ஆக்‌ஷன், காமெடி என இயக்குநர் பாண்டிராஜ் ‘பக்கா’ தமிழ் சினிமா பேக்கேஜாக கடைக்குட்டி சிங்கத்தை உருவாக்கியுள்ளார். சூர்யா தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.


SHARE