Tuesday, July 10, 2018

ரெமோவைக் குறிவைத்த சிவா!

SHARE

பிரபல நடிகர்களைக் கலாய்த்துத் தள்ளும் தமிழ்ப்படம்-2 படத்தின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிவா நடிப்பில் தமிழ்ப்படம்-2 உருவாகி வருகிறது. பகடி வகை திரைப்படமான இதன் போஸ்டர்ஸ், டீசர்ஸ் என அனைத்தும் அரசியல்வாதிகள் தொடங்கி சினிமா நடிகர்கள் வரை பலரையும் கலாய்க்கும்வண்ணம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது அந்தப் படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.




அதில், ‘வாட்ச் மெக்கானிக்’ சூர்யா, ‘வெர்ஜின் பையன்’ ஜி.வி.பிரகாஷ்குமார், பீரை மோர் ஆக்கும் விக்ரம், ‘ரெமோ’ சிவகார்த்திகேயன், ‘விஸ்வரூபம்’ கமல் என பல பேரைக் கிண்டலடித்துள்ளனர். குறிப்பாகக் காதல் எனும் பெயரில் பெண்களின் பின்னால் சுற்றி டார்ச்சர் செய்யும் ரெமோ சிவகார்த்திகேயனை ரொம்பவே கேலி செய்துள்ளனர்.இவற்றுடன் இன்னொரு சீக்ரெட்டும் இந்த புரோமோ மூலம் வெளிவந்துள்ளது.

அதாவது முதல் பாகத்தில் சிவாவின் நண்பர்களாக நடிகர்கள் வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா ஆகியோர் நடித்தனர். இதில் நடிகர்களும் இயக்குநர்களுமான ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா, சந்தானபாரதி ஆகியோர் சிவாவுக்கு நண்பர்களாக வருவார்கள் என யூகிக்க முடிகிறது.


SHARE