Monday, July 16, 2018

பேருந்து கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!

SHARE

தமது கோரிக்கைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் இணங்க தவறினால், பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை தெரிவித்தார்.




அண்மையில் இடம்பெற்ற எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக தாம் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், குறுகிய தூர பேருந்துகள் மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பையும், தொலைத்தூர பேருந்துகள் மாதாந்தம் 40 ஆயிரம் ரூபாய் இழப்பையும் சந்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பேருந்து கொள்வனவிற்காக 2 வீத வட்டியுடனான சலுகைக் கடனை வழங்குமாறும், டயர்கள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கு வரி விலக்களிக்கப்பட வேண்டும் என்றும் தனியார் பேருந்து சங்கத்தினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்க மறுக்கும் பட்சத்தில், வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு மாறாக ஒருதலைப்பட்சமாக பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
SHARE