சம்மாந்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை – கல்முனை பிரதான வீதி, வலானபிட்டிய பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை பாரவூர்தியுடன் வான் ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் பிலிமத்தலாவ – தவுலகல பிரதேசத்தினை சேர்ந்த 55 வயதுடைய சின்னாலெப்பை அஹமது யாசின், 42 வயதுடைய சக்காப் சியானா ஆகிய கணவன் மற்றும் மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் மகனான 12 வயதுடைய நிஸாம்டீன் மின்ஹாஜ் எனும் சிறுவன் உள்ளிட்ட மேலும் இருவர் படுகாயமடைந்து சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.