Friday, July 13, 2018

கட்டடத்திலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்!

SHARE

வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் கோயில் கட்டட இடிபாட்டுக்குள் சிக்கி இளைஞரொருவர் இன்று (வெள்ளக்கிழமை) மாலை பலியாகியுள்ளார்.

வவுனியா, ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியை சேர்ந்த சிவா வயது 31 என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,




குறித்த இளைஞன் மேசன் தொழில் புரிந்து வருவதுடன் நேற்றைய தினம் வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் தங்கிநின்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் உடைக்கப்பட்ட நிலையில் இருந்த கொங்கிறிட் தூண்மீது ஏறியுள்ளார் இதனால் பாரம் தாங்காத கொங்கிறீட் தூணுடன் கூடிய சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக கட்டட இடுபாடுகளுக்குள் சிக்கிய குறித்த இளைஞனின் தலைப் பகுதியில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞனை ஏற்றுவதற்கு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் முன்வராமையினால் அங்கிருந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையின் அவசர அம்புலன்ஸ் சேவையை அழைத்து குறித்த இளைஞனை வைத்தியசாலையில் சேர்ந்துள்ளனர்.




எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே இளைஞன் இறந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






SHARE