Tuesday, July 3, 2018

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் அதிகாரி தற்கொலை!

SHARE

காங்கேசன்துறையில் பொலிஸ் அதிகாரியொருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த அதிகாரி தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சற்று நேரத்திற்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாாி உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையை சேர்ந்த 25 வயதுடைய நஸீர் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே பொலிஸ் சேவையில் இணைந்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், கடந்த சில தினங்களாக இவர் வீட்டிற்கு அடிக்கடி தொலைபேசியில் உரையாடியதை அவதானித்ததாக சக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையே காரணமாக அமைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




SHARE