Saturday, July 21, 2018

நீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

SHARE

வெயங்கொட – தியெல்ல ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

16 மற்றும் 17 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு மாணவர்கள் மாலைநேர வகுப்புக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டு தியெல்ல ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், தியெல்ல ஓயாவுக்கு நீராடச் சென்ற நிலையில் இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு மாணவன் நீரில் முழ்கியதையடுத்து அவரை காப்பாற்ற முயற்சித்த மற்றைய மாணவனும் நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பிரதேச வாசிகள் மற்றும் வெயங்கொட பொலிஸார் இணைந்து இரண்டு மாணவர்களின் சடலங்களை மீட்டுள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SHARE