Tuesday, July 10, 2018

மீண்டும் இணையும் சிம்பு - ஜோதிகா!

SHARE

ஜோதிகா நடித்து வரும் காற்றின் மொழி படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார்.

நடிகராக இருந்த சிலம்பரசன் 2004ஆம் ஆண்டு மன்மதன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வெற்றிப்படமாக அமைந்த அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். பின் இவர்கள் இருவரும் இணைந்து 2006ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரவணா என்ற திரைப்படத்தில் நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, ஜோதிகா இணைந்து நடித்து வருகிறார்கள்.




சமீபத்தில் தனது நான்கு படங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார் சிம்பு. அதனையடுத்து தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் காற்றின் மொழி படத்தில் நடிகர் சிம்புவாகவே கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் துமாரி சுலு. பண்பலைத் தொகுப்பாளினியாக வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

இதில் ஜோதிகா நடத்துகிற நிகழ்ச்சியில் ஒரு ஸ்டார் பாராட்டுகிற மாதிரி காட்சியில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். சிம்புவும், ஜோதிகாவின் பெரிய ரசிகர் என்பதால் உடனே ஒத்துக் கொண்டுள்ளார். படத்தில் அது பெரிய சீன் என்பதால் வேகமாகவும், அழகாகவும் முடித்து கொடுத்திருக்கிறார் சிம்பு.
SHARE