Monday, July 30, 2018

யாழில் பட்டப்பகலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

SHARE

யாழ்ப்பாணத்தில் இன்று மதியம் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

நல்லூரின் வாள்முனையில் கிராமசேவகர் மடக்கப்பட்டு அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டு உடமைகள் வாகனம் நாசமாக்கப்பட்டது.

அத்துடன் கொக்குவில் பகுதியில் உள்ள மற்றுமோர் வீட்டை அடித்து நொருக்கியதோடு, அங்கே நிறுத்தி வைத்திருந்த ஓர் கயஸ் வாகனம் முழுமையாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.




நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வண்ணார் பண்ணை கிராம சேவகர் அலுவலகத்துக்குள் மோட்டார் சைக்கிள்களில் சென்ற இளைஞர்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டது.

அதேவேளை கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலை அருகில் இருந்த வீடு ஒன்றிற்குள் புகுந்த குழு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கயஸ் வாகனத்தைப் படுமோசமாக தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அத்தோடு வீட்டின் உடமைகள் மற்றும் வீட்டு கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியதுடன், கயஸ் வாகனத்தையும் தீ வைத்துக் கொழுத்தியுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.





SHARE