Wednesday, July 25, 2018

பாடகியான கீர்த்தி!

SHARE

நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விக்ரமுடன் இணைந்து சாமி ஸ்கொயர் திரைப்படத்தில் ‘புது மெட்ரோ ரயில்’ என்ற பாடலை பாடியிருக்கிறார்.

2003ஆம் ஆண்டில் நடிகர் விக்ரம், இயக்குநர் ஹரி கூட்டணியில் வெளியானது சாமி திரைப்படம். அப்படத்தில் விக்ரம், த்ரிஷா, விவேக், ரமேஷ் கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து சாமி ஸ்கொயர் படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் ஹரி சென்ற வருடம் அறிவித்திருந்தார். அதன்படி இதற்கான வேலைகளும் மிக வேகமாக தொடங்கி நடைபெற்று வந்தன. மிகுந்த எதிர்பார்ப்போடு உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா   (ஜூலை 23) சென்னையில் நடை பெற்றது.




இப்படத்தில் புது மெட்ரோ ரயில் என்ற பாடலை விக்ரமுடன் இணைந்து பாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த பாடல் குறித்து கீர்த்தி பேசுகையில் “தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் நான் இதுவரை நடித்த 'நேனு லோக்கல்', 'நேனு ஷைலஜா' ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன. அதேபோல் அவர் தமிழில் எனக்கு இசையமைக்கும் இப்படமும் ஹிட் ஆகவேண்டும். நான் எங்கேயோ பாடுற வீடியோவை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஷிபுதான் என்னை மாட்டிவிட்டுட்டாரு” என்றார்.




இது குறித்து தேவி ஶ்ரீ பிரசாத் பேசும்போது, “விக்ரம் சார் வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை ஒரு பாட்டுப் பாட வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணிட்டோம். இவரோடு பாட ஒரு ஸ்பெஷல் குரல் ஒண்ணு கிடச்சா நல்லா இருக்கும் என தோன்றியது. அப்போது தயாரிப்பாளர் ஷிபு, ஒரு வீடியோவை காட்டினார். அது படத்தோட சக்ஸஸ் மீட்ல கீர்த்தி பாடுற வீடியோ. இவங்கள பாட வைத்தால் நல்லா இருக்கும் என்று சொல்லி உருவானது இந்த 'புது மெட்ரோ ரயில்' பாடல். கீர்த்தி தொடர்ந்து அவரது படங்களில் பாட வேண்டும்” என்றார்.

மேலும் சாமி ஸ்கொயர் திரைப்படம் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE