Tuesday, July 3, 2018

சிறுவனின் உயிரைப் பறித்த றம்புட்டான் பழம்!

SHARE

விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவனின் தொண்டையில் றம்புட்டான் விதை சிக்கியதில் பரிதாபகமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம்-நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பிரதேசத்தில் வசித்து வந்த 6 வயதுடைய முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என்ற சிறுவனே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.




நேற்று திங்கட்கிழமை மாலை சிறுவன் றம்புட்டான் பழத்தை சுவைத்துக் கொண்டு இருந்த சமயம் தொண்டையில் அதன் விதை சிக்கிக் கொண்டுள்ளது.

இதனையடுத்து நுரைச்சோலையில் உள்ள தனியார் வைத்தியரிடம் கொண்டு சென்று, பின்னர் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் உயிரிழந்துள்ளார்.




பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுவனின் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைத்தாக கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE