Monday, July 16, 2018

சூர்யா படத்தில் இணைந்த தனுஷ்!

SHARE

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தில் தனுஷ் பாடகராக இணைந்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடிக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். சென்னையில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார். தனுஷ் செல்வராகவன் படங்களில் இதற்கு முன் பாடல்கள் பாடியிருந்தாலும் சூர்யாவின் படத்தில், அவருக்கு குரல் கொடுப்பது இதுவே முதல் முறை.




யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்பாடல் குத்துப் பாடல் வகையில் உருவாக உள்ளது. ஏற்கனவே தனுஷ் பாடிய பல பாடல்கள் பேசப்பட்ட நிலையில் இந்த பாடலும் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப.பாண்டி படத்திற்கு பின் தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு  (ஜூலை 13) தொடங்கியுள்ளது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘வட சென்னை’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
SHARE