Sunday, July 8, 2018

பாகுபலியின் அடுத்த பாகம்!

SHARE

பாகுபலி திரைப்படங்கள் இரு பாகங்களாக வெளிவந்து இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. தற்போது அவர் பாகுபலி படத்தில் இடம்பெற்ற சிவகாமி, கட்டப்பா கதாபாத்திரங்களின் முன்கதையைத் தொடராக பிரமாண்டமாக இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘தி ரைஸ் ஆஃப் சிவகாமி’ புத்தகம் வெளியாகி வரவேற்பு பெற்றது. ராஜமௌலி இந்தப் புத்தகத்தை தழுவி மூன்று சீசன்களாக இந்தத் தொடரை இயக்கவுள்ளார். ‘பிரஸ்தனம்’ படத்தின் இயக்குநர் தேவா கட்டா இணை இயக்குநராக இதில் பணியாற்றவுள்ளார்.




நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்தத் தொடருக்கு ஒரு எபிசோடு தயாரிக்க 20 மில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தேவா கட்டா தற்போது பிரஸ்தனம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியில் இறங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். லக்னோவில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் சஞ்சய் தத், மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
SHARE