Wednesday, July 25, 2018

சமந்தாவுக்குப் போட்டி சமந்தாவே!

SHARE

நடிகை சமந்தா நடித்துள்ள சீமராஜா மற்றும் யூ டர்ன் திரைப்படங்கள் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளன.

தமிழ்த் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. திருமணத்திற்குப் பிறகும் தனது மார்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டு நடித்துவருகிறார். இந்த ஆண்டின் முதல் பாதி அவருக்கு வெற்றிகரமாக அமைந்திருக்கிறது. தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம், மகாநடி, தமிழில் நடிகையர் திலம் மற்றும் இரும்புத்திரை ஆகியப் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.




சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படங்கள் சீமராஜா மற்றும் யூ டர்ன். இதில் சீமராஜா படத்தின் வெளியீட்டுத் தேதி செப்டம்பர் 13 என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சமந்தா நடித்துள்ள மற்றொரு படமான யூ டர்ன் திரைப்படத்தையும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்டு கன்னடத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'யூ டர்ன்'. இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படம் வெளியாகும் தேதியை உறுதிப்படுத்தியுள்ளார். ஒரே சமயத்தில் சமந்தாவின் இரு படங்களும் வெளியாகவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




திருமணத்திற்கு பிறகு சமந்தா மற்றும் நாக சைதன்யா இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கான பூஜை  (ஜூலை 23) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இயக்குநர் சிவநிர்வனா இப்படத்தை இயக்கவுள்ளார். சமந்தா - நாக சைதன்யா இணை ஏற்கனவே 'ஏ மாய சேசவே, மனம், ஆட்டோநகர் சூர்யா' ஆகிய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


SHARE