Tuesday, July 3, 2018

ஓய்வு பெற்றும் தரப்படுத்தலில் முன்னிலை வகிக்கும் முரளி!

SHARE

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனும் இடம்பிடித்துள்ளார்.

சிறந்த பந்து வீச்சாளர் வரிசையில் முத்தையா முரளிதரன் 5ஆவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது, 70 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை தனதாக்கிக் கொண்டதை கருத்தில் கொண்டே, முத்தையா முரளிதரனுக்கு இந்த இடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




முத்தையா முரளிதரனின் இந்த சிறந்த பந்துவீச்சு காரணமாக, இலங்கை அணி குறித்த போட்டியில் 134 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டது.

இந்த பட்டியலில் முதல் இடத்தை நியூஸிலாந்தின் ரிச்சட் எட்லி பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிச்சட் எட்லி 52 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை தனதாக்கிக் கொண்ட சாதனையை அடிப்படையாக்க் கொண்டே அவர் இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.




இரண்டாவது இடத்தை இங்கிலாந்து அணியின் ஸ்டுவட் புரோட்டும், மூன்றாவது இடத்தை தென் ஆபிரிக்காவின் ஊக் தைபீல்ட்டும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த பட்டியலில் இலங்கை அணி வீரர் ரங்கன ஏரத் 19ஆவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


SHARE