Saturday, July 21, 2018

வடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்!

SHARE

இந்திய அரசின் நிதி உதவியுடன் நாட்டின் சில பகுதிகளில் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டு வரும் நிலையில் இன்று(சனிக்கிழமை) ஒரு தொகுதி அம்புலன்ஸ் வண்டிகள் வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அம்புலன்ஸ் வண்டிகளுக்கான 1990 என்ற அவசர சேவைகளும் யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அவசர அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி சேவைகளையும் ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர், மத்திய மாகாண அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஊடாக உரையாற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.





















SHARE