தேசிய அடையாள அட்டையை முதற்தடவையாக பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு 100 ரூபாய் அறவிடப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் ஊடாக இதனை குறிப்பிட்டுள்ளது.
குறித்த செயற்பாடு எதிர்வரும் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவ்வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய அடையாள அட்டையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாயின் 250 ரூபாய் அறவிடப்படவுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.