Tuesday, August 7, 2018

யாழ் – கோப்பாய் வீதியில் விபத்து: நகைக்கடை உரிமையாளர் உயிரிழப்பு!

SHARE

யாழ்ப்பாணம், கோப்பாய் வீதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் பவுசர் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 47 வயதுடைய ரஞ்சன் எனப்படும் நகைக்கடை உரிமையாளரை பின்னால் பயணித்த தண்ணீர் பவுசர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் நகைக்கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 18 வயதுடைய அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


SHARE