Wednesday, August 22, 2018

யாழில் ரயிலுடன் மோதி இருவர் உயிரிழப்பு!

SHARE

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோட்டர் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இளைஞர் ஒருவர் இரு துண்டுகளாக மீட்கப்பட்ட துயரச் சம்பவம் சங்கத்தானை தொடருந்துக் கடவையில் இடம்பெற்றது.

இன்று இரவு 7 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.
விபத்தில் மட்டுவிலைச் சேர்ந்த மார்க்கண்டு சுலக்சன் (வயது-22) மகாதேவா சுஜீவன் (வயது – 23) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.




இன்று இரவு 7 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்து சங்கத்தானைப் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, இளைஞர்கள் இருவரும், மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் போதே இந்த இந்தப் பெரும் துயரம் ஏற்பட்டது.

தொடருந்துக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்த போதும், தொடருந்து அண்மித்த தூரத்தில் வரும் போது, அதிவேகமாக கடவையைக் கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றது என்று சம்பவ இடத்தில் நின்றவர்கள் விசாரணையின் போது தெரிவித்தனர்.




இரு துண்டுகளாக உடல் பிரிந்த இளைஞரின் சடலத்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் ரயில் பணியாளர்கள் ஒப்படைத்தனர்.

மற்றைய இளைஞரின் சடலத்தை பொது மக்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




தொடருந்து, இரு சடலங்களையும் ஒப்படைத்த பின்னர் சுமார் ஒரு மணித்தியாலயம் தாமதித்தே யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டது.



SHARE