Wednesday, August 8, 2018

கலைஞர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை! (நேரலை)

SHARE

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா சதுக்கத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இன்று 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொலிஸார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தை வந்தடைந்தது. அங்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர், அண்ணா சமாதிக்கு பின்புறம் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
SHARE