Wednesday, September 26, 2018

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனின் 31ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது!

SHARE

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்அ, வசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும் ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.




ஆகிய ஜந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக 12 நாட்கள் உணவொறுப்பில் ஈடுபட்டு வீர வரலாறாகிப் போன தியாக தீபம் லெப்.  கேணல் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) 31 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் கி.கிருஸ்ணமீனன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் காலை 10.48 க்குப் பல்கலைக்கழகப் பதில் துணைவேந்தரும், விஞ்ஞான பீடாதிபதியுமான கலாநிதி பிரின்ஸ் ஜெயதேவன் பொதுச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.




தொடர்ந்து மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் உட்பட கலந்து கொண்ட அனைவரும் மலர் சூடி தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்தினர். விரிவுரையாளர்கள், மாணவர்களின் நினைவுரைகள் இடம்பெற்ற அதே நேரம் தியாகி திலீபனின் அகிம்சைப் போராட்ட வரலூற்றை விளக்கும் காணொலிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.























SHARE