Thursday, September 27, 2018

தெற்கு சூடான் போரில் 3.82 லட்சம் பேர் பலி!: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

SHARE

மத்தியக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் 3.82 லட்சம் பேர் பலியானதாக அண்மையில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.




இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் இணைந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகமொன்று நடத்திய புள்ளிவிவர ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டுப் போரின்போது குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நேரடியாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மட்டுமின்றி, மருத்துவ வசதி குறைந்ததாலும், நோய் பரவல் காரணமாகவும் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சேர்த்து, ஆய்வாளர்கள் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளனர்.




தெற்கு சூடான் பிரச்சனையில் இதுவரை அறியப்பட்டதைவிட இந்த பலி எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும்.

மிகவும் பரபரப்பாக பேசப்படும் சிரியா உள்நாட்டுப் போரை விட தெற்கு சூடானில் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE