Thursday, September 27, 2018

புதிய சாதனையைப் படைத்துள்ள 95 வயது நபர்! (Video)

SHARE

இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 95 வயது திரு. ரே ஊலி ( Ray Woolley) தற்போது உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

உலகின் ஆக முதிய முக்குளிப்பாளராக அவர் சாதனை படைத்துள்ளார்.

கடந்த மாதம் தமது 95ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய திரு. ரே, இன்னமும் இயங்கி வரும் ஆக அதிக வயதான ஸ்கூபா முக்குளிப்பாளராக இருந்து வருகிறார்.




கடந்த சனிக்கிழமை அன்று திரு. ரே, 40.6 மீட்டர் ஆழத்தில் 44 நிமிடங்களுக்கு முக்குளித்தார்.

அவரது முந்தைய சாதனை நேரம் 41 நிமிடம். ஆழம் 38.1 மீட்டர்.

அப்போது அவருக்கு 94 வயது.




தமது உடல்நலம் நன்றாக இருந்தால் அடுத்த ஆண்டும் முக்குளிக்கத் தயார் என்று திரு. ரே கூறினார்.

திரு. ரே 58 ஆண்டுகளாக முக்குளித்து வருகிறார்.

SHARE