Wednesday, September 26, 2018

இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

SHARE

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் 195 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

கடந்த வாரம் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது.
1628 ரூபாவாகக் காணப்பட்ட 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1823 ரூபாவாக இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
SHARE