Sunday, September 16, 2018

சைமா விருது: தமிழ்த் திரையுலகின் பட்டியல்!

SHARE

ஒரு கலைஞனுக்கு உற்சாகமூட்டக்கூடிய விஷயமாக இருப்பது பாராட்டுகளும், அங்கீகாரமும் தான். அந்த வகையில் திரைத்துறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அவர்களது துறை சார்ந்து பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.




அதன் அடிப்படையில் சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 6 ஆண்டுகளாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றுவருகிறது. விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளைச் சேர்ந்த சிறந்த திரைப்படக் கலைஞர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றனர். 2017ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களுக்கான 7வது சைமா திரைப்பட விருது விழா நேற்றும், இன்றும் (செப்டம்பர் 14,15) நடைபெற்றது. இதில் தமிழ்த் திரையுலகினர் பெற்ற விருதுகளின் பட்டியல்.


சிறந்த படம் - விக்ரம் வேதா

சிறந்த இயக்குநர் - அட்லி (மெர்சல்)

சிறந்த நடிகர் - சிவகார்த்திகேயன் (வேலைக்காரன்)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள் பரிந்துரை) - மாதவன் (விகரம் வேதா)

சிறந்த நடிகை - நயன்தாரா (அறம்)

சிறந்த நடிகை (விமர்சகர்கள் பரிந்துரை) - அதிதி பாலன் (அருவி)






சிறந்த துணை நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (8 தோட்டாக்கள்)

சிறந்த துணை நடிகை - ஷிவடா (அதே கண்கள்)

சிறந்த வில்லன் - எஸ்.ஜே.சூர்யா (மெர்சல், ஸ்பைடர்)

சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (மெர்சல்)

சிறந்த பாடலாசிரியர் - விவேக் (மெர்சல்)





சிறந்த பாடகர் - சித் ஸ்ரீராம் (மெர்சல்)

சிறந்த பாடகி - லக்‌ஷ்மி சிவனேஸ்வர்லிங்கம் (போகன்)

சிறந்த புதுமுக நடிகர் - வசந்த் ரவி (தரமணி)

சிறந்த புதுமுக நடிகை - அதிதி ராவ் ஹைதரி (காற்று வெளியிடை)








சிறந்த அறிமுக இயக்குநர் - அருண் பிரபு புருஷோத்தமன் (அருவி)

சிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி (சங்கிலி புங்கிலி கதவ தொற)

சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன் (காற்று வெளியிடை)

வாழ்நாள் சாதனையாளர் விருது - பாடகி பி.சுசீலா.
SHARE