Sunday, September 16, 2018

ஹீரோவானார் பிக் பாஸ் சாம்பியன்!

SHARE

பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸின் முதல் சீஸனில் பதினாறோடு ஒருவராகக் கலந்துகொண்டவர் நடிகர் ஆரவ். விஜய் ஆண்டனி நடித்த சைத்தான், மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் வாயிலாகத்தான் பலருக்கும் பரவலாக அறிமுகம் ஆனார் ஆரவ்.




இந்நிலையில் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் ஆரவ். அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கும் இப்படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தலைப்பாக ராஜபீமா என வைக்கப்பட்டுள்ளது. கன்னத்தில் செக்கச்சிவந்த ரத்தம் வழிய போஸ்டருக்கு போஸ் கொடுத்துள்ள ஆரவ், இன்னொரு போஸ்டரில் யானைக்குக் கைகொடுத்தபடி நிற்கிறார்.




இரு போஸ்டரிலும் யானை இடம்பெற்றுள்ளதையும் யானையின் தந்தத்தை சித்தரிக்கும் வகையில் போஸ்டர் டைட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளதையும் பார்க்கையில் இப்படம் கும்கியைபோல யானைக்கும் மனிதனுக்கும் இடையே நடப்பதுமாதிரியான திரைக்கதையைக் கொண்ட படமாக இருக்குமோ எண்ணத் தோன்றுகிறது.




இப்படத்திற்கு சைமன் கே கிங்க் இசையமைக்க, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார் கருந்தேள் ராஜேஷ். மதன் கார்க்கி பாடல்களை எழுத, சுரபி ஃபில்ம்ஸ் சார்பாக எஸ். மோகன் இதைத் தயாரிக்கிறார். இந்த நிறுவனம் சார்பாகத் தயாரிக்கும் முதல் படம் இதுவே எனும் விஷயம் குறிப்பிடத்தக்கது.


SHARE