Saturday, September 15, 2018

தியாகத்தின் புனிதம் காப்போம்; தியாகி திலீபனின் நினைவு தினம்!

SHARE

தியாகி திலீபனின் நினைவு தினத்தன்று கேளிக்கை நிகழ்வுகள் நடாத்தப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். மாநகர சபை உறுப்பினர் எம். அருள்குமரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 24,25,26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் தேசிய சுற்றுலாத் துறை தின விழாவை  நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்நிகழ்வைத் தவிர்க்க வேண்டும் எனக்கோரி - யாழ். மாநகர சபை எல்லையினுள் அதனை அன்றைய தினம் நடாத்த அனுமதிக்க வேண்டாம் என்று வேண்டி யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரியிருக்கிறார்.




அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு : 

அகிம்சைக்கு அர்தம் தந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நினைவு கூரப்படுகின்றது.

அமைதி வழியில் அவர் மேற்கொண்ட உணவொறுப்பு தியாகத்தில் தன்னை ஆகுதியாகி அவர் அமரத்துவமடைந்த 26.ஆம் திகதியன்று தாயகப் பகுதி எங்கும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்படும் என்பதில் ஐயமேதுமில்லை.




இருப்பினும் இந்நாளில் தேசிய நிகழ்வுகளென்ற அடிப்படையிலேனும் பொது நிகழ்வுகள் எதனையும் நடத்தாமல் - அத்தகைய நிகழ்வுகளை ஓரிரு நாட்கள் முந்தியோ, பிந்தியோ நடாத்துவதன் மூலம் தியாகத்தின் புனிதத்தைக் காக்க அனைவரும் முன்வர வேண்டும்.

எனவே குறித்த நாளில்  யாழ். மாநகர சபையின் நியாயாதிக்க எல்லையினுள் கேளிக்கை நிகழ்வெதனையும் நடத்த அனுமதியளிக்க வேண்டாம் என விநயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.




என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   
SHARE