Friday, September 28, 2018

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றக்கோருவது இன்னொரு யுத்தத்திற்காகவே – இராணுவ தளபதி!

SHARE

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை அகற்றவேண்டும் என தமிழ் தலைமைகளும் புலம்பெயர் அமைப்புக்களும் கோருவது இன்னொரு யுத்தத்தை ஆரம்பிப்பதற்காகவே என இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அங்குள்ள தமிழ் மக்களில் 80 விகிதத்திற்கும் அதிகமானவர்கள் அங்கிருக்கும் இராணுவம் வெளியேறுவதை விரும்பவில்லை என்றும் கூறினார்.




கண்டி தலதா மாளிகையில் இன்று இடம்பெற்ற வழிபட்டு நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்தவொரு அச்சுறுத்தலும் காணப்படவில்லை. எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு இராணுவம் தயாராக இருக்கின்றது என கூறினார்.




அத்துடன் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பு காணப்படுகின்றது.

நாட்டில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை வலுவான படைகளாக உள்ளன. நாட்டில் போருக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்த சக்திகள், நாட்டின் பாதுகாப்புச் சூழ்நிலை தொடர்ப்பிலும் நன்கு அறிந்திருப்பதாக தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
SHARE