Saturday, September 22, 2018

யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை!

SHARE
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.




இதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் குருநகர், பழைய பூங்காவின் ஒரு பகுதி, பாசையூர், கொழும்புத்துறையின் ஒரு பகுதி, இலந்தைக்குளம் வீதி, புங்கன்குளம் வீதி, சந்தனமாதா கோவில் வீதி, வலன்புரம், துண்டி, நெடுங்குளம், மணியந் தோட்டம், கெலன் தோட்டம், பெரிய தோட்டம், உதயபுரம், குருசோ வீதி, அச்சுக்கூட வீதி, பிரதான வீதியின் ஒரு பகுதி, ஆனைக்கோட்டை, நவாலி வீதி, மூத்த விநாயகர் கோயிலடி, நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம், கலையரசி வீதி, அரசடி, வேலக்கைப் பிள்ளையார் கோயிலடி, அட்டகிரி, கொத்துக் கட்டி, ஸ்ரான்லி வீதி, மணிக்கூட்டு வீதி, கஸ்தூரியார் வீதியில் ஒருபகுதி, மின்சார நிலைய வீதி, பருத்தித்துறை வீதியில் ஒரு பகுதி, ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதான அலுவலகம், ஸ்ரான்லி வீதியிலுள்ள பீப்பிள் லீசிங் அன் பினான்ஸ் கம்பனி, ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கி, சிறுநதியா நகை மாளிகை, Raja Talkies LOLC, ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ், அன்னைநாகா பூட் சிற்றி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE