Saturday, September 15, 2018

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்திலும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது!

SHARE

இந்திய அமைதிப் படைகளுக்கு எதிராக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியமான தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.




தியாகி திலீபன் தன் உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தில் பல்கலைக் கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியது. பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு, ஈகைச் சுடரேற்றி, மலர் சூடி அஞ்சலித்தனர்.
















SHARE