Wednesday, September 26, 2018

விஸ்வாசம்: ஹைதராபாத்தில் டூயட்

SHARE

அஜித் நடிப்பில் உருவாகும் விஸ்வாசம் படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நான்காவது முறையாக இணைந்து நடித்துவரும் படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அஜித் மதுரை வட்டார மொழியில் வசனங்கள் பேசி நடிக்கும் இந்த படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படக்குழு அஜித், நயன்தாராவின் டூயட் காட்சிகளைப் படமாக்கிவருகிறது. யோகி பாபு, தம்பி ராமையா, ரவி அவானா ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.




பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படமும் அன்றைய தேதியில் வெளியாகும் என சமூகவலைதளங்களில் கருத்து பரவியது. ரஜினி நடித்துள்ள 2.O படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சுமார் நாற்பத்தைந்து நாள்கள் இடைவெளியில் அடுத்த படம் வெளிவர வாய்ப்பில்லை என திரைத்துறை வட்டாரத்தில் கூறப்பட்டுவருகிறது. இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.




அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார். போனி கபூர் அந்த படத்தை தயாரிக்கிறார்.
SHARE