Friday, September 28, 2018

யாழ்.நகரில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த ஹஏஸ் விபத்து – தம்பதியர் படுகாயம்!

SHARE

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹஏஸ் வாகனம், வர்த்தக நிலையத்துக்குள் புகுந்தது. அதில் பயணித்த தம்பதியர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் வர்த்தக நிலையத்தின் முகப்பில் நின்று கொண்டிருந்த தம்பதியரே படுகாயமடைந்தனர்.




அவர்கள் அண்மையில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டது.




எஸ்.சிறிதரன் (வயது – 50 ) அவரது துணைவி வதனி ( வயது – 48 ) ஆகியோரே படுகாயமடைந்தனர்.
அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


SHARE