Saturday, September 29, 2018

இறுதி யுத்தத்தின் போது நாம் ஓடி ஒழியவில்லை – சரத் பொன்சேகா!

SHARE

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தாமே, மஹிந்தவோ, கோட்டபாயவே ஓடி ஒழியவில்லை என முன்னாள் இராணுவ தளபதியும், அமைச்சருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது அனைத்து தலைவர்களும் வெளிநாடுகளுக்கு சென்றிருந்ததாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய போது குறிப்பிட்டிருந்தார்.




இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே முன்னாள் இராணுவ தளபதியும், அமைச்சருமான சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சரத்பொன்சேகா, ‘யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை கவனம் செலுத்தவேண்டிய பல விடயங்கள் உள்ளன. வெறுமனே தாக்குதல் குறித்து மாத்திரம் கவனம் செலுத்த முடியாது.




இந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியது சிரேஸ்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் கடமை. இதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிவாரங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறினார். நான் சீனாவிற்கு சென்றேன்.

மேலும் யுத்தத்தை இரண்டு வாரங்களில் தீர்மானித்து விட முடியாது. இறுதி இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தாக்குத்லை சாதாரண சிப்பாயால் கூட செய்திருக்க முடியும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
SHARE