Friday, September 28, 2018

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் இறங்கிய பயணிகள் விமானம்! (Video)

SHARE

சுக் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று 47 பேருடன் பசிபிக் கடலுக்குள் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மைக்ரோனேசியா தீவிலிருந்து 36 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்களுடன் சென்ற ஏர் நியுகினி எனும் விமானம் சுக் விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்க முயற்சித்தது.

அப்போது அந்த விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருந்த பசிபிக் கடல் பகுதியில் விழுந்தது. உடனடியாக மீனவர்கள் படகில் சென்று விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். ஒரு பயணிக்கு மட்டும் படுகாயம் ஏற்பட்டது.




இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறுகிய ஓடுதளம் காரணம் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


SHARE