Saturday, October 6, 2018

யாழில் சில பகுதிகளில் நாளை(07) மின்தடை!

SHARE

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.




இதன்படி நாளை நாளை காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை ஏழாலை, அலுக்கை, மல்லாகம், மல்லாகம் நீதிமன்றம், ஜெட் மோட்டர்ஸ்,சுன்னாகம் ஒரு பகுதி, சுன்னாகம் இலங்கை வங்கிப் பிரதேசம், சுன்னாகம் கார்கில்ஸ், சுன்னாகம் மக்கள் வங்கி கிளை அலுவலகம், அம்பலவாணர் வீதி, கந்தரோடை, பிப்பிலி, கொத்தியாவத்தை, கந்தையா உபாத்தியாயர் வீதி, உடுவில் ஆக் வீதி, உடுவில் டச்சு வீதி, மருதனார்மடத்தின் ஒரு பகுதி, யாழ்.பல்கலை நுண்கலைப்பீடப் பிரதேசம், புலோப்பளை, அல்லிப்பளை, இணுவில் பாலாவோடை, சங்குவேலி, பன்னாலை, அளவெட்டி, அம்பனை, தெல்லிப்பழை, துர்க்காபுரம், கட்டுடை, சீரணி, சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி, பெருமாள் கடவை, துணைவி, சங்கானை, தொட்டிலடி, பண்டத்தரிப்பு, விழிசிட்டி, தொல்புரம், சுழிபுரம், கள்ள வேம்படி, வடலியடைப்பு, சில்லாலை, சாந்தை, விளான், பெரியவிளான், இளவாலை, மாரீசன் கூடல், சேந்தாங்குளம், மாதகல், காஞ்சிபுரம், ஜம்புகோளப்பட்டிணம், குசுமாந்துறை, காட்டுப்புலம், தொண்டமானாறு, கெருடாவில், அக்கரை, வளலாய் , மயிலியதனை,சிதம்பராக் கல்லூரிஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE