Saturday, October 13, 2018

யாழில் சில பகுதிகளில் நாளை(14) மின்தடை!

SHARE

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.




இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை- 05.30 மணி வரை யாழ். இணுவில், பாலாவோடை, உடுவில், டச்சு வீதி, சங்குவேலி, மருதனார்மடம் ஒரு பகுதி, சுன்னாகம் இலங்கை வங்கிப் பிரதேசம், அம்பலவாணர் வீதி, யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடப் பிரதேசம், அராலி, வட்டுக் கோட்டை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE