Friday, October 5, 2018

புலமைப்பரிசில் பரீட்சை 2018 - தமிழ் மொழி மூலம் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள்!

SHARE

கடந்த 2018 ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (05) வெளியிடப்பட்டன.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 199 புள்ளிகள் பெற்ற இரு மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

பிலியந்தலை, சோமவீர சந்திரசிறி வித்தியாலய மாணவன் புமித் மெத்னுல் விதானகே, வியாங்கொடை, புனித மேரி மகா வித்தியாலய மாணவன் குருகுலசூரிய சனூப திமத் பெரேரா ஆகியோரே அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.




அகில இலங்கை ரீதியில், 198 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்ற மூன்று மாணவர்களில் இருவர் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலய மாணவன் மகேந்திரன் திகலொழிபவன், மற்றும் சாவகச்சேரி கனிஷ்ட வித்தியாலய மாணவி நவஸ்கன் நதி ஆகிய இருவரும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்கள்
இடம்
பெயர்
புள்ளி
பாடசாலை
02
மகேந்திரன் திகலொழிபவன்
198
யாழ்இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயம்
02
நவஸ்கன் நதி
198
சாவகச்சேரி கனிஷ்ட வித்தியாலய மாணவி
03
பாலகுமார் ஹரிதிகன்சுஜா
197
சிவபுரம் கனிஷ்ட வித்தியாலயம்வவுனியா
04
சேம்தினேஷ் 
நேசிகா
196
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிகொழும்பு04
04
சாகிர் மொஹம்மட் 
சுஹா
196
முஸ்லிம் மகளிர் கல்லூரிகொழும்பு 04
04
தஸ்லீம் ஷல்ஜி அஹமட்
196
சாஹிரா வித்தியாலயம்அக்கரைப்பற்று
04
ஜெயராஜ் துஹின் தரேஷ்
196
உன்னிச்சை 6ஆவது மைல் வித்தியாலயம்
04
கனகலிங்கம் தேனுஷன்
196
கிளிநொச்சி மகா வித்தியாலயம்
04
ஜெயந்தன் கிருஜனா
196
ஹொலி கான்வென்ட்யாழ்ப்பாணம்
04
சிவனேஸ்வரன் 
சாருக்‌ஷா
196
மஹஜனா கல்லூரிதெல்லிப்பளை
05
ரசரூபன் துஷ்சாதனா
195
மாமடுபழம்பாசி அ.த.க.பாடசாலை,நெடுங்கேணி
இதேவேளை, மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பான மாவட்ட ரீதியிலான வெட்டுப் புள்ளிகளையும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது
அதன் அடிப்படையில் தமிழ், சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வருமாறு:

மாவட்டம்
சிங்களமொழிமூலம்
தமிழ்மொழிமூலம்
01
கொழும்பு
168
165
02
கம்பஹா
168
165
03
களுத்துறை
168
165
04
கண்டி
168
165
05
மாத்தளை
168
165
06
நுவரெலியா
163
162
07
காலி
168
165
08
மாத்தறை
168
165
09
அம்பாந்தோட்டை
166
160
10
யாழ்ப்பாணம்
-
164
11
கிளிநொச்சி
-
163
12
மன்னார்
-
162
13
மட்டக்களப்பு
-
164
14
வவுனியா
158
164
15
முல்லைத்தீவு
158
163
16
அம்பாறை
164
163
17
திருகோணமலை
163
162
18
குருணாகல்
168
165
19
புத்தளம்
165
162
20
அநுராதபுரம்
165
162
21
பொலன்னறுவை
165
162
22
பதுளை
165
163
23
மொணராகலை
165
162
24
இரத்தினபுரி
166
162
25
கேகாலை
168
165

SHARE