Sunday, October 28, 2018

வெலிகந்தவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 27 பேர் காயம்!

SHARE

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் வெலிகந்த பிரதேசத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வெலிகந்தவிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியும், கொழும்பில் இருந்து திருக்கோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதன்போது காயமடைந்தவர்கள் வெலிகந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வெலிகந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SHARE