Sunday, October 14, 2018

தரம் 5 பரீட்­சை­யில் – யாழ்ப்­பா­ணம் முன்­னேற்றம்!

SHARE

தரம் 5 புல­மைப் பரி­சில் பரீட்­சை­யில் வெட்­டுப் புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்ற மாண­வர்­க­ளின் விகி­தா­சா­ரத்­தில் இலங்­கை­யின் 25 மாவட்­டங்­க­ளில் யாழ்ப்­பாண மாவட்­டம் இரண்­டா­வது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்­ளது. அதே­போன்று இலங்­கை­யில் உள்ள 99 கல்வி வல­யங்­க­ளில் யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யம் முதல் நிலை­யைப் பெற்­றுள்­ளது.

கல்வி அமைச்சு வெளி­யிட்ட புள்ளி விவ­ரத்­தி­லேயே இந்த விட­யம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு தரம் 5 புல­மைப் பரி­சில் பரீட்­சை­யில் வெட்­டுப் புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்­றுச் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளின் விகி­தா­சா­ரத்­தின் அடிப்­ப­டை­யில் மூன்­றா­வது இடத்­தில் இருந்த யாழ்ப்­பாண மாவட்­டம் நடப்­பாண்­டுக்­கான தரம் 5 புல­மைப்­ப­ரி­சில் பரீட்­சை­யில் இரண்­டாம் இடத்­துக்கு வந்­துள்­ளது. நடப்­பாண்­டில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இருந்து 8 ஆயி­ரத்து 373 மாண­வர்­கள் தோற்­றி­யி­ருந்­த­னர்.




அவர்­க­ளில் ஆயி­ரத்து 188 மாண­வர்­கள் வெட்­டுப் புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்­றுள்­ள­னர். ஏனைய மாவட்­டங்­க­ளின் விகி­தா­சா­ரத்­து­டன் ஒப்­பி­டும் போது யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் விகி­தா­சா­ரம் இரண்­டா­வது நிலை­யில் உள்­ளது.
முதல் நிலையை கம்­பகா மாவட்­டம் பெற்­றுள்­ளது.

அங்கு 11ஆயி­ரத்து 627 மாண­வர்­கள் பரீட்­சைக்­குத் தோற்­றி­யி­ருந்­த­னர். அவர்­க­ளில் ஆயி­ரத்து 666 மாண­வர்­கள் வெட்­டுப் புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்­றுள்­ள­னர். மூன்­றா­வது இடத்தை குரு­நா­கல் மாவட்­டம் பெற்­றுள்­ளது. அதே போன்று இலங்­கை­யில் உள்ள 99 கல்வி வல­யங்­க­ளில் யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யம் முதல் நிலையை அடைந்­துள்­ளது.




நடப்­பாண்­டுக்­கான தரம் 5 புல­மைப்­ப­ரி­சில் பரீட்­சை­யில் இலங்கை முழு­வ­து­மி­ருந்து 3 இலட்­சத்து 50 ஆயி­ரத்து 191 மாண­வர்­கள் தோற்­றி­யி­ருந்­த­னர். அந்­தப் பரீட்­சை­யின் பெறு­பே­று­கள் அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்­டன. பரீட்­சைக்­குத் தோற்றிய மாண­வர்­க­ளில் 36 ஆயி­ரத்து 14 பேர் வெட்­டுப் புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்­றுள்­ள­னர்.
SHARE