Wednesday, October 31, 2018

8 மணித்தியாலங்களில் சமையல் கலைஞர்கள் செய்த சாதனை! (Video)

SHARE
போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா தலைநகர் சாராயேவோவில் சாதனை ஒன்று முறியடிக்கப்பட்டது.

எட்டு மணிநேரத்தில் தொடர்ந்து 14,000க்கும் மேற்பட்ட பான்கேக்குகள் அக்டோபர் 26ஆம் திகதி சமைக்கப்பட்டன.

கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இந்த முயற்சி இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோவில் சமையல் கலைஞர்கள் 12,700 பான்கேக்குகளைச் சமைத்து சாதனை படைத்தனர்.

இந்த முறை சாராயேவோவில் சமையல் கலைஞர்கள் 13,000 பான்கேக்குகளைத் தயாரிக்கத் திட்டமிட்டனர்.

ஆனால் எட்டு மணி நேரத்தில் திட்டமிட்டதைவிட அதிகமாக 14,186 பான்கேக்குகளைச் செய்து போஸ்னியாவைச் சேர்ந்த சமையல் கலை வல்லுநர்கள் சாதனையை முறியடித்தனர்.

SHARE