“Anchor Students with Talent ” வட மாகாண மாணவர்களின் திறமைக்கு மகுடம் சூட்டிய பிரம்மாண்ட பயணம்


300 பாடசாலைகள் 1500 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் என வடமாகாண மாணவர்களின் இசை, நடனம், தொழிநுட்பம் என பல்துறை சார் திறன்களை இணைத்து அவர்களின் திறமைகள் மூலம் அவர்களை உலகறிச்செய்வதற்காக ஒரு தனியார் நிறுவனமாக அங்கர் நிறுவனம் வட மாகாண மாணவர்களோடு, மக்களோடு இணைந்து மேற்கொண்டிருந்த பிரம்மாண்டபயணமே “Anchor Students with Talent ”.

இந்தபிரம்மாண்ட போட்டிக்களம் கடந்த 13ஆம் திகதியுடன் வெற்றிக்கரமாக நிறைவடைந்து ஒட்டுமொத்த இலங்கையர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்திருந்தது.

இலங்கையில் வட மாகாண மாணவர்களுக்காக நடந்து முடிந்த இந்நிகழ்வானது மாணவர்களின் திறமைகளையும் அனுபவத்தையும் வெளிகாட்டுவதற்கான மிகப்பெரிய போட்டி களமாக நடைப்பெற்று முடிந்தது.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற ஐந்து மாவட்டங்களிலுமுள்ள அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய வண்ணம் இந்த மாபெரும் பிரம்மாண்டமான போட்டி களம் நடைபெற்று முடிந்தமை இதன் சிறப்பு அம்சமாகும்.

குறிப்பாக இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே இவ்வாறான போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு மாணவர்களை மகிழ்வித்து அவர்களுக்கு மகுடம் சூட்டுவார்கள். ஆனால் முதன் முதன்முறையாக இலங்கையிலும் இத்தகைய வெற்றி நிகழ்ச்சி நடாத்தப்பட்டமை வட மாகாண மாணவர்கள் மற்றும் சமூகத்தின் மத்தியில் ஒரு புதிய புரட்சியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெறுமனே இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்று முடிந்த சிவில் யுத்தத்தில் தனது தாய் தந்தை உறவுகளை இழந்து தவித்து வந்த மாணவர்களுக்கு இத்தகைய நிகழ்வு புதிய உத்வேகத்தைகொடுத்துள்ளது என்பதில் எவ்வித மாற்று கருத்துக்களும் இருக்க முடியாது.

இந்நிலையில், இந்தபோட்டி நிகழ்ச்சி கடந்து வந்த பாதையை சற்று மீட்டி பார்த்தால் கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி யாழ்.இந்து கல்லூரியில் அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவுடன் கோலாகலமாக ஆரம்பமானது.

யாழ் மாணவர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்து இசை, நடன, தொழிநுட்பத்துறைகளில் வழங்கிய உந்துதல் “Anchor Students with Talent ” போட்டிகளின் இறுதி நாளான கடந்த 13ஆம் தினம் வரை குறையவே இல்லை.

இதனைதொடர்ந்து, கடந்த செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற போட்டி தேர்வில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி இருந்தனர்.

அடுத்தப்படியாக, முல்லைத்தீவு மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி முல்லைத்தீவு ரோமன் கதோலிக்க மகளிர் பாடசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கு இடம்பெற்ற போட்டிகளிலும் பெரும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு போட்டி நிகழ்வுகளை சிறப்பித்திருந்தனர்.

இதேபோலவே, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளிலும் நாம் எதிர் பார்த்ததை விட அதிகளவிலான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குப்பற்றிருந்தமை சிறப்பாகும்.

இப்போட்டியில் பங்கு கொண்ட மாணவர்களும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் உற்சாகமளித்த பெற்றோர்களும், இலைமறை காயாக இருந்த மாணவர்களின் திறமைகளுக்கு களம்கொடுத்த அங்கர் நிறுவனத்திற்கு பெரும் மகிழ்ச்சியோடு நன்றியை தெரிவித்திருந்திருந்தனர்.

இவற்றைத் தொடர்ந்து முதற்கட்ட சுற்றில் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பிரம்மாண்ட அரையிறுதி மேடை கடந்த 6 ஆம் திகதி கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

அரையிறுதி சுற்றில் இருந்து இறுதி பிரம்மாண்ட மேடைக்கு தெரிவாகி நடுவர்களின் தீர்ப்போடு யாழ்.நகர சபை மைதானத்தில் கூடியிருந்த சுமார் 4000 இற்கும் மேற்பட்ட மக்களின் பேராதரவுடன் மகுடம் சூடிக்கொண்ட 18 திறமை முத்துக்களின் பெயர் பட்டியல் இதோ உங்களுக்காக..

இசை –கீழ்ப்பிரிவு

002 – கோபிக்கா சிவயோகராஜா – ஏல்/அஹார் மகா வித்தியாலயம்

021 – குமரதாஸ் குருக்கள் விஸ்வ சுந்தர சர்மா – யாழ்.அருணோதயா கல்லூரி

013 – ரிதுஷன் – வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம்

இசை – மேல்பிரிவு

047 – சி.திலக்சன் – மன்னார் சென்சேவியர் ஆண்கள் கல்லூரி

056 – கிருஷிக்கா செல்வராஜ் – கே/பாரதி வித்தியாலயம்

032 – சஞ்சிக்காக சுகுமார் – யாழ்.மகஜன கல்லூரி

நடனம் –கீழ்ப்பிரிவு

028 – விஷாலி தயாலன் – யாழ்.வேம்படி மகளீர் கல்லூரி

014 – எம்.கிஷோன் – யாழ்.சென்பெட்ரிக் கல்லூரி

010 – பிஜோன்சி கிளிங்ன்டா – முல்லைத்தீவு முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

நடனம் –மேல்பிரிவு

006 – என்டனி ஜெகன் ஜகார்த்தனன் – முல்லைத்தீவு வற்றாப்பாளை மகா வித்தியாலயம்

009 – ஆர்.சகானா – வவுனியா இரம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம்

015 – ராஜிவன் ஜெயனீஷன் – யாழ்.இந்து கல்லூரி

தொழிநுட்பம்- கீழ்ப்பிரிவு

013 – சுந்தரலிங்கம் பிரணவன் – கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்

002 – சிவதாசன் அபிஷான் – வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்

034 – ஜெனோ திருக்குமரன் – யாழ்.கரம்பொன் சிறிய புஸ்ப மகளீழ் மகா வித்தியாலயம்

தொழிநுட்பம்- மேல்பிரிவு

001 – சண்முகநாதன் சகன்ராஜ் – தட்சணா மருத மடு மகா வித்தியாலயம்

011 – விஜயரட்ணம் விஜிதரன் – ஆவரங்கல் நடராஜா ராமலிங்க வித்தியாலயம் 005 – ராஜலிங்கம் தஸ்மி – இளவாலை மெய்கண்டன் மகா வித்தியாலயம்

இவற்றோடு, இறுதி பிரம்மாண்ட களத்திற்கு மேலும் பிரம்மாண்டம் சேர்க்கும் வகையில் தென்னிந்திய பிரபல பாடகர்களான ஹரிசரண், திவாகர் மற்றும் பாடகி ஹரிப்பிரியா ஆகியோரும் கலந்து இந்த உன்னத வரலாற்று போட்டி நிகழ்ச்சியினை நிறைவடைய செய்தமை மேலும் அழகுக்கு அழகு சேர்த்த விடயமாகவே எல்லோராலும் பார்க்கப்பட்டது.

மேலும் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வடமாகாண கல்வி அமைச்சர் கௌரவ திரு.க. சர்வேஸ்வரன், வடமாகாண கல்வி பணிப்பாளர் திரு எஸ். உதயகுமார், விசேட அதிதியாக இலங்கைக்கான அங்கர் கிளை முகாமையாளர் திலிப் பத்திரன, வொண்டேரா நிறுவன ஊடக முகாமையாளர் திரு பத்ம பிரியன் சுதந்திர ராஜன், திருமதி சத்திக்கா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.










Name

cinema news,725,india,75,Jaffna News,1964,Medical,180,news,4494,Popular,6,Rasi Palan,562,religion news,339,Sports News,326,sri lanka news,3584,Technology,125,Today's cinema,85,world news,304,
ltr
item
Yarldevi News: “Anchor Students with Talent ” வட மாகாண மாணவர்களின் திறமைக்கு மகுடம் சூட்டிய பிரம்மாண்ட பயணம்
“Anchor Students with Talent ” வட மாகாண மாணவர்களின் திறமைக்கு மகுடம் சூட்டிய பிரம்மாண்ட பயணம்
https://3.bp.blogspot.com/-EQXWOk4xO4A/W8dl4eaNjeI/AAAAAAAAdfE/2YxYvgidzZMCJcyjbckg3XXhgtfzG8pQQCLcBGAs/s640/IMG-9021.JPG
https://3.bp.blogspot.com/-EQXWOk4xO4A/W8dl4eaNjeI/AAAAAAAAdfE/2YxYvgidzZMCJcyjbckg3XXhgtfzG8pQQCLcBGAs/s72-c/IMG-9021.JPG
Yarldevi News
http://www.yarldevinews.com/2018/10/anchor-students-with-talent.html
http://www.yarldevinews.com/
http://www.yarldevinews.com/
http://www.yarldevinews.com/2018/10/anchor-students-with-talent.html
true
1391562164977580846
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy